பொதுத் தமிழ் பாடத் திட்டம்
பகுதி – (அ) இலக்கணம்
i) பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;
ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
தொடரும் தொடர்பும் அறிதல்
i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
பிரித்தெழுதுக
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதல்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
பிழை திருத்தம்
(i) சந்திப்பிழையை நீக்குதல்
(ii) ஒருமைப் பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
இலக்கணக் குறிப்பறிதல்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
பகுதி – (ஆ) இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
(பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவனி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
மனோனன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா,மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு. நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்
கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடாசாமி நாட்டார், ரா.பி.சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
ஜி.யு,போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – அம்பேத்கர் – காமராசர் – சமுதாயத் தொண்டு.
தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்
உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
பொது அறிவு பாடத் திட்டம்
அலகு – 1 பொது அறிவியல் (GENERAL SCIENCE)
இயற்பியல் (Physics)
பிரபஞ்சம், பொதுவான அறிவியல் விதிகள், அறிவியல் கருவிகள், கண்டுபிடிப்புகள்
தேசிய அறிவியல் ஆய்வுக்கூடங்கள், அறிவியல் கலைச் சொற்கள்
எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் தன்மைகள், அளவீடுகள், தர அலகுகள்.
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – மின்னாற்றல் மற்றும் எந்திர ஆற்றல்.
வெப்பம், ஒளி மற்றும் ஒலி – அணு மற்றும் உட்கரு இயற்பியல்.
வேதியியல் (Chemistry)
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒருக்கம், தாதுக்கள் மற்றும் கனிமங்களின் வேதியியல்.
கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள்
தாவரவியல் (Botony)
உயிர் அறிவியலின் அடிப்படைக் கருத்துக்கள்.
செல் – உயிரின் அடிப்படை அலகு.
உயிரிகளின் வகைப்பாடு
ஊட்டச்சத்துகள் மற்றும் சம விகித உணவு
சுவாசம்
விலங்கியல் (Zoology)
இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டம்
நாளமில்லா சுரபி மண்டலம், இனப்பெருக்க மண்டலம்.
மரபியல் – மரபுப் பண்பு குறித்த அறிவியல்.
சுற்றுச் சூழல், சூழலியல், உயிரி பன்மைபரவல் மற்றும் இதன் பாதுகாப்பு
சுகாதாரம், மனித நோய்கள், தடுப்பு மற்றும் தீர்வுமுறைகள்.
பரவும் மற்றும் தொற்று நோய்கள், பரவா நோய்கள்
அலகு – 2, நடப்பு நிகழ்வுகள் (CURRENT EVENTS)
வரலாறு (History)
சமீபத்திய தேசிய நிகழ்வுகள்.
தேசிய சின்னம், மாநிலங்கள் குறித்த பொது விவரங்கள்.
செய்திகளில் இடம்பிடித்த பிரபல நபர்கள் மற்றும் இடங்கள், விளையாட்டுச் செய்திகள்.
புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள், பரிசுகள் மற்றும் விருதுகள்,
சமீபத்திய வரலாற்று முக்கிய நிகழ்வுகள்.
இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்.
முக்கிய பொறுப்புகளில் இருப்போர் மற்றும் புதிய நியமனங்கள்.
அரசியல் அறிவியல் (Political Science)
பொதுத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் சிக்கல்கள்.
இந்தியாவில் அரசியல் கட்சிகள், அரசியல் முறைகள்.
அரசியல் விழிப்புணர்வு & பொது நிர்வாகம்
தன்னார்வ அமைப்புகளின் பங்கு
அரசின் நலத்திட்டங்கள் அதன் பயன்பாடுகள்.
புவியியல் (Geography)
புவியியல்சார் சுவடுகள்.
பொருளாதாரம் (Economics)
நடப்பு சமூக பொருளாதார சிக்கல்கள்
அறிவியல் (Science)
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்.
அலகு – 3, புவியியல் (GEOGRAPHY)
புவி மற்றும் பிரபஞ்சவியல், சூரியக் குடும்பம்.
பருவகாலம், மழைப்பொழிவும் வானிலை மற்றும் காலநிலை
நீர் ஆதாரங்கள், இந்தியாவில் ஆறுகள், மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்.
இயற்கைத் தாவரங்கள், காடுகள் & வனவிலங்குகள்
வேளாண் பயிர்முறை, கால்நடைகள், மீன்வளம்.
போக்குவரத்து, தொலைதொடர்பு
சமூகப் புவியியல், மக்கட்தொகை, மக்கள் நெருக்கம் மற்றும் பரவல்.
இயற்கைப் பேரிடர்கள், பேரிடர் மேலாண்மை.
அலகு – 4, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாடு
(HISTORY AND CULTURE OF INDIA AND TAMIL NADU)
சிந்துசமவெளி நாகரிகம், குப்தர்கள்,
டில்லி சுல்தானியர்கள், முகலாயர்கள்
மராத்தியர்கள், விஜயநகரம் மற்றும் பாமினி அரசுகள்,
தென்னிந்திய வரலாறு, தமிழ் மக்களின் பண்பாட்டு மரபுகள்.
சுதந்திரத்திற்கு பிந்தய இந்தியா
இந்தியப் பண்பாட்டின் சிறப்பியல்புகள்
வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்கங்கள் – மதச்சார்பற்ற நாடாக இந்தியா.
நுண்கலைகள், நடனம், நாடக, இசை தொடர்பான அமைப்புகள்.
தமிழ் நாட்டில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி.
அரசியல் கட்சிகள், பிரபலமான மக்கள் நலத்திட்டங்கள்.
அலகு – 5, இந்திய அரசியல் (INDIAN POLITY)
இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகப்புரை.
அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் ஆட்சிப்பகுதிகள்.
அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மனித உரிமை சாசனம்.
ஒன்றிய(மத்திய) சட்டம் இயற்றும் அவை நாடாளுமன்றம்.
மாநில செயலாட்சி – மாநில சட்டம் இயற்றும் அவை – சட்டமன்றம்
உள்ளாட்சி அரசாங்கம் (பஞ்சாயத் ராஜ்) – தமிழ் நாடு
இந்திய கூட்டாட்சித்துவம் – மாநில அளவில் தேர்தல் ஆணையங்கள்/
அரசியலமைப்பின் அட்டவணைகள்.
அலுவல் மொழி மற்றும் அட்டவணை-VIII
இந்திய பொதுவாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC)
மக்கள் நடுவர் மன்றங்கள் / லோக் அதாலத் (Lok Adalats), குறைதீர்ப்பாளர் (Ombudsman),
இந்திய தலைமை கணக்கு தணிக்கையர் (CAG)
தகவல் அறியும் உரிமை – மத்திய, மாநில அளவிலான ஆணையங்கள்.
மகளிருக்கு அதிகாரமளித்தல்
நுகர்வோர் உரிமைகள் பாதுகாத்தல்,
அலகு-6, இந்திய பொருளாதாரம் (INDIAN ECONOMY)
இந்திய பொருளாதாரத்தின் தன்மைகள், ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள் குறித்த மதிப்பீடு
நிலச்சீர்திருத்தங்கள் & வேளாண்மை, வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடுகள்.
தொழிற்வளர்ச்சி
ஊரக வளர்ச்சித் திட்டங்கள்.
சமூகம்சார் பொருளாதாரப் பிரச்சினைகள்: மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம்,
வேலைவாய்ப்பு, வறுமை.
தமிழ் நாட்டின் பொருளாதாரப் போக்கு
அலகு – 7, இந்திய தேசிய இயக்கம் (INDIAN NATIONAL MOVEMENT)
பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
இந்திய தேசியக் காங்கிரஸ்
காந்தி, நேரு, தாகூர், நேதாஜி போன்ற தலைவர்களின் பங்கு
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்களிப்பு – இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் & ஏனையோர்.
அரசியல் கட்சிகளின் தோற்றம்,
இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் முறையமைப்பு.
அலகு – 8, மனத்திறன் சோதனை (MENTAL ABILITY TEST)
தரவுகளை தகவல்களாக மாற்றுதல்.
தகவல்கள் சேகரித்தல், ஒருங்கமைத்தல், வெளிப்படுத்துதல்,
அட்டவணைகள், வரைபடங்கள். விளக்கப்படங்கள்
தகவல்களின் பகுப்பாய்வு,
சுருக்குதல், சதவீதம், மீ.பெ.வ, மற்றும் மீ.சி.ம கண்டுபிடித்தல்
விகிதங்கள், தனி வட்டி, கூட்டுவட்டி
பரப்பளவு, கன அளவு, நேரமும் வேலையும்
முடிவெடுத்தல் மற்றும் பிரச்சினைகள் தீர்வு செய்தல்
தர்க்கரீதியாக பகுத்தறியும் திறன், புதிர்கள், பகடை.
விசுவல் பகுத்தறியும் திறன், எழுத்து-எண் பகுத்தறியும் திறன்.
எண் வரிசை- தர்க்க எண் / எழுத்து / படங்களின் தொடர் வரிசை